சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் 'தூய்மையே சேவை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 5:00PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில், பிரம்ம குமாரிகள் அமைப்புடன் இணைந்து 'தூய்மையே சேவை' குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது.
நாடு தழுவிய 'தூய்மை இயக்கம் 6.0' திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்போடு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் அமைப்பின் சகோதரி வித்யார்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மனிதர்களின் மனநிலைக்கேற்பவே அவர்களின் சுற்றுப்புறச் சூழலும் அமையும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், இயற்கை மீதான மரியாதை மற்றும் எளிய வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், எண்ணம், சொல், செயலிலும் தூய்மை இருக்கும்போதே நிலையான புறத்தூய்மை சாத்தியமாகும் என்றார். தூய்மையை வெறும் கடமையாகக் கருதாமல், சுயமரியாதையுடனும் அகத்தூய்மையுடனும் இணைத்துப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கழிவு மேலாண்மைக்கு மறுசுழற்சி முறையைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323350®=3&lang=1
செய்தி அடையாள எண்:2323350
***
TV/VK/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323758)
வருகையாளர் எண்ணிக்கை : 8