பாதுகாப்பு அமைச்சகம்
தூய்மையே சேவை பிரச்சாரத்தின் கீழ், பாதுகாப்பு கணக்குத் துறை தன்னார்வத் தூய்மை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 7:53PM by PIB Chennai
பாதுகாப்பு கணக்குத் துறை, தூய்மையே சேவை 2026 என்ற பிரச்சாரத்தின் கீழ், நாடு தழுவிய தன்னார்வத் தூய்மை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இரண்டு வார காலத்திற்கு நடைபெறும் இந்த தூய்மைப் பணியில், கள அலுவலகங்கள் பங்கேற்றன. மேலும், தாயின் பெயரில் மரக்கன்று நாடும் திட்ட முன்முயற்சியின் கீழ் 25,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த பிரச்சாரம், புது தில்லி, துவாரகா, பாக்டோலாவில் உள்ள எம் சி டி தொடக்கப் பள்ளியில், பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி (சிஜிடிஏ) திருமதி அல்கா நங்கியா அரோரா தலைமையில், தில்லி மாநகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட தூய்மை இயக்கத்துடன் நிறைவடைந்தது. சிஜிடிஏ அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், எம்சிடி அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். இதில் மரக்கன்றுகள் நடும் பணியும் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323543®=3&lang=1
(Release ID: 2323543)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323621)
வருகையாளர் எண்ணிக்கை : 9