சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்கும் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 5:20PM by PIB Chennai

சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆலோசனை, மறுவாழ்வு, உளவியல் ரீதியான ஆதரவு ஆகியவை, போதைப்பொருள் சார்ந்த சவால்களை முறியடித்து, தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவக்கூடும்.

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான ரஞ்சித் தாஸின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பயணம், முழுமையான போதை மீட்பு சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சேவைகள் மீட்சியை ஊக்குவிப்பதிலும், தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதிலும், தனிநபர்கள் சுயசார்பு, கண்ணியமான வாழ்க்கைக்கு உதவுவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

மார்ச் 3, 2026 அன்று, அசாம் மாநிலம் நாகானில் உள்ள மாவட்ட போதை மீட்பு மையத்திடமிருந்து ரஞ்சித் உதவி பெற்றார். இம்மையம் அவரது மீட்சி, உளவியல் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி விரிவான உதவிகளை வழங்கியது. இந்த ஆதரவில் ஆலோசனை சேவைகள், மருத்துவப் பரிந்துரைகள், உளவியல் உதவி, விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323371&reg=3&lang=1

(Release ID: 2323371)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323618) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी