தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சேவைகளுக்கான டிஜிட்டல் அமைப்புகள் தணிக்கை கையேட்டின் வரைவை டிராய் வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 2:14PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துக்களைக் கோருவதற்காக, தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு & கேபிள்) சேவைகள், டிஜிட்டல் உரிமை மேலாண்மை (டிஆர்எம் - DRM) அடிப்படையிலான டிஜிட்டல் முகவரியிடக்கூடிய அமைப்புகள் தணிக்கை கையேடு, 2026-ன் வரைவை இன்று (09.10.2026) வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு, கேபிள்) சேவைகளுக்கான டிஆர்எம் அடிப்படையிலான டிஜிட்டல் முகவரியிடக்கூடிய அமைப்புகள் தணிக்கை கையேடு, 2026-ன் வரைவு, டிராயின் இணையதளமான www.trai.gov.in -ல் பதிவேற்றப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து, விரிவான தரவுகள்/சான்றுகளுடன் கூடிய எழுத்துப்பூர்வமான உள்ளீடுகள், கருத்துகள், பரிந்துரைகள் 30.10.2026-க்குள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை advbcs-2@trai.gov.in, jtadvbcs-3@trai.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புவது விரும்பத்தக்கது. ஏதேனும் தெளிவுபடுத்தல்/தகவலுக்கு, advbcs-2@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +91-11-20907774 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321259®=48&lang=2
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323538)
வருகையாளர் எண்ணிக்கை : 6