சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தளங்கள் மூலம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கான சந்தை அணுகல் விரிவாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 4:18PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் பாரத் துலிப் (பாரம்பரிய கைவினைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம்) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் பாரம்பரிய கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துகிறது.

2024 நவம்பர் 5 அன்று தொடங்கப்பட்ட பாரத் துலிப் திட்டம், பாரம்பரிய கைவினைஞர்களை பரவலான சந்தைகளுடன் இணைக்கவும், டிஜிட்டல் மற்றும் இதர சந்தைப்படுத்துதல் வழிவகைகள் மூலம் தங்களுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும், அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முயற்சி, நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், பாரம்பரிய கைவினைத் திறனையும் பாதுகாக்கும் அதே சூழலில் தகுதியுடைய கைவினைஞர்களை பொருளாதார மேம்பாட்டிற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323277&reg=3&lang=1

***

TV/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2323505) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati