பாதுகாப்பு அமைச்சகம்
கூட்டுப் பணிப்படை 154-ன் தலைமைப் பொறுப்பை இந்தியக் கடற்படைநிறைவு செய்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 2:39PM by PIB Chennai
பஹ்ரைனின் மனாமாவில் 2026 அக்டோபர் 14 அன்று நடைபெறும் விழாவில், கூட்டுப் பணிப்படை 154-ன் தலைமைப் பொறுப்பை இந்தியக் கடற்படை ஒப்படைக்க உள்ளது. இந்தியக் கடற்படை, கூட்டு கடல்சார் படைகளின் ஒரு படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
கூட்டுப் பணிப்படை 154 என்பது பிரத்யேக பன்னாட்டு கடல்சார் பயிற்சிப் பணிப்படையாகும். 47 நாடுகளைக் கொண்ட இந்த படைப்பிரிவின் அமைப்பிற்குள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன், தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்முறைப் பயிற்சி, திறன் மேம்பாட்டை இது எளிதாக்குகிறது. 2022-ல், இந்த கூட்டுப் பணிப்படைப் பிரிவில் இந்தியா இணைந்தது.
2023-ல் முழு உறுப்பினராக இருந்தது. 2026 பிப்ரவரி 11 அன்று கூட்டுப் பணிப்படை 154-ன் தலைமைப் பொறுப்பை இந்தியக் கடற்படை ஏற்றுக் கொண்டது.
இந்தியக் கடற்படையின் தலைமையிலான இக்காலகட்டத்தில், இந்தப் படைப்பிரிவின் கடல்சார் மேம்பாட்டுப் பயிற்சியின் கீழ் கூட்டுப் பணிப்படை பிரிவு 154-ன் தொடர்ச் பன்னாட்டுப் பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டது.
இக்காலகட்டத்தில், 20 பணியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், ஆபரேஷன் காம்பஸ் ரோஸ் 26-1, ஆபரேஷன் சதர்ன் ரெடினஸ் 26-2, கடல் கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை தொடர்பான துறைசார் நிபுணர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323188®=3&lang=1
***
SK/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323486)
வருகையாளர் எண்ணிக்கை : 6