சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் தெற்கு கோட்ட அளவிலான அஞ்சலகக் குறைதீர்ப்பு முகாம் 2026 அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 12:17PM by PIB Chennai

அஞ்சல் துறை சார்பில் சென்னை தெற்கு கோட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் 2026 அக்டோபர் 27 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சல் அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளரால் இந்த முகாம் நடத்தப்படவுள்ளது. இந்தக் குறை தீர்ப்பு முகாமில் அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் குறித்தத் தனிப்பட்டக் குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

அஞ்சலில் அனுப்பப்பட்ட பொருட்கள் பற்றிய புகார்கள் என்றால், அது அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர் / பெறுநர் குறித்த முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் உள்ளிட்ட முழு விவரங்களை குறிப்பிட வேண்டும்.

சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களாக இருந்தால் கணக்கு எண் / பாலிசி எண், பெயர் மற்றும் டெபாசிட் செய்தவரின் முழு முகவரி, அஞ்சலக கிளையின்  பெயர் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சாதாரண அல்லது விரைவு தபால் மூலம் அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம் என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறை மேல் கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்-சென்னை நகர தெற்கு கோட்டம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தனியார் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322694) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English