பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 8:48PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, முப்படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளருமான ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி, விமானப்படைப் பணியாளர்கள், முன்னாள் படைவீரர்கள், பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தற்போதைய போர்க்களச் சூழலில், விமானப்படையின் தொடர்ச்சியான செயல்பாட்டுச் சிறப்பையும், வான்வழி ஆற்றலைத் தீர்க்கமான முறையில் பயன்படுத்தும் திறனையும் அவர்  பாராட்டினார். இந்த ஆண்டு விமானப்படை தினத்தின் கருப்பொருளான "இந்திய விமானப்படை: தவறற்றது, தளராதது, துல்லியமானது” என்பது, விமானப்படையின் உண்மையான சாராம்சத்தையும் உயரிய மாண்புகளையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய விமானப்படை வெளிப்படுத்திய செயல் திறன், இந்தியாவின் உத்திசார் ஆற்றலுக்கும், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் அதற்கு உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது, என்று அவர் குறிப்பிட்டார். கூட்டுமுயற்சிகள், தன்னிறைவு, புத்தாக்கம் ஆகியவற்றை நோக்கிய இந்திய விமானப்படையின் சீரான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், உள்நாட்டுத் தயாரிப்பு தளங்கள், மேம்பட்ட ஆயுத அமைப்புமுறைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் இணைப்பு, செயல்பாட்டுக் கோட்பாடுகள், வழிமுறைகளின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321027&reg=3&lang=1    

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322573) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी