சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் யாசகர்களின் நிலையை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 2:54PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தில்லி அரசின் சமூகநலத்துறையுடன் இணைந்து தேசியத் தலைநகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் யாசகம் இல்லாத இந்தியா – யாசகம் இல்லாத தில்லியை நோக்கி என்ற தலைப்பில் அக்டோபர் 14 அன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை விருந்தினராகவும், தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.

யாசகம் கேட்போரின் நீடித்த மறுவாழ்வு, சமூகத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல், செயல்படுத்தும் அனுபவம் குறித்து விவாதித்தல் ஆகியவற்றுக்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322200&reg=48&lang=1

***

TV/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322441) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी