திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் 9 தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.440 கோடி செலவில் மேம்படுத்த ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 1:54PM by PIB Chennai

நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) வலுப்படுத்த மேம்படுத்தப்பட்ட ஐடிஐ-க்கள் மூலம், பிரதமரின்  திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றத் திட்டத்தின் கீழ் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஆர்சிலர்மிட்டல் நிப்பான் எஃகு இந்தியா நிறுவனத்துடன் கூட்டு முயற்சி வாயிலாக குஜராத், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்குநரகம், குஜராத், ஆந்திரப் பிரதேச மாநில அரசுகள், ஆர்சிலர்மிட்டல் நிப்பான் எஃகு இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் குறிப்பிட்ட இரண்டு தொகுப்புகளிலும் அங்கீகரிக்கப்பட்ட உத்திசார்ந்த முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது குஜராத் சூரத் பகுதியிலுள்ள 5 அரசு       ஐடிஐ-க்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணத்தில் உள்ள 4 அரசு ஐடிஐ-க்களை உள்ளடக்கியதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322170&reg=48&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322433) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu