பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த மூன்றாவது தேசிய மாநாடு நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2026 4:13PM by PIB Chennai

மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த மூன்றாவது தேசிய மாநாட்டையும் கண்காட்சியையும் புதுதில்லியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் ஏற்பாடு செய்தது. ஐஐசிஏ-வின் வணிகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் மாநாடு, “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பெருநிறுவன சமூகப் பொறுப்பின் தன்மைகளை மறுபரிசீலனை செய்தல்” ​​என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது .

மத்திய அரசின் முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் திரு அஜித் சேத் , ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநர் திரு ஞானேஷ்வர் குமார் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில், நிறைவு அமர்வுடன் மாநாடு நிறைவடைந்தது. மேம்பட்ட ஆளுகை, நிறுவன ஒருங்கிணைப்பு, சான்றுகள் அடிப்படையிலான திட்டமிடல், வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் பெருநிறுவன சமூகப் பொறுப்பு சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321728&reg=3&lang=1

(Release ID : 2321728)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321755) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी