மாநிலங்களவைச் செயலகம்
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை – மாநிலங்களவை துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 2:35PM by PIB Chennai
தான்சானியாவின் அருஷாவில் நடைபெற்று வரும் 153-வது சர்வதேச நாடாளுமன்ற யூனியன் பொதுச்சபை (ஐபியு) கூட்டத்தின் 2-ம் நாள் அமர்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு பங்கேற்றது.
மக்களவை உறுப்பினரும், ஐபியு சுகாதாரக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ஐபியு சுகாதாரக் குழுவின் அமர்வுகளில் கலந்துகொண்டதுடன், அக்குழுவுடன் களப்பயணமும் மேற்கொண்டார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், 153-வது ஐபியு கூட்டங்களில் பங்கேற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளித்தார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்றும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.
மக்களவை உறுப்பினர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்கான நாடாளுமன்ற உத்திகள் குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீதான விவாதத்திலும் அவர் பங்கேற்றார்.
மக்களவை உறுப்பினர் திருமதி கமல்ஜீத் ஷெஹ்ராவத், அமைதி, சர்வதேச பாதுகாப்புக்கான நிலைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நிலையான அமைதிக்கான நாடாளுமன்ற தூதரக உத்திகள், சமரசம், உரையாடல் ஆகிய தலைப்பிலான விவாதத்தில் அவர் பங்கேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320068®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320947)
வருகையாளர் எண்ணிக்கை : 8