புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவை உற்பத்தி குறியீட்டின் வரையறையை விரிவுபடுத்துவது குறித்த அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 4:51PM by PIB Chennai

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், சேவைத் துறை ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கிறது. நாட்டின் மொத்த மதிப்பு கூட்டல் மதிப்பில், பாதி அளவிலான பங்களிப்பை இத்துறை வழங்குகிறது. இத்துறையின் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்காணிக்க, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2024–25-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, முறைசார் சேவைத் துறைக்கான சேவை உற்பத்திக் குறியீட்டை மாதந்தோறும் தொகுக்கும் பணியை, ஜூலை 2026-ல், சோதனை அடிப்படையில் தொடங்கியது.

இதன் தொடக்கக்கட்ட கட்டமைப்பு 19 முக்கிய சேவைகளைக்  கண்காணிக்கிறது. இதற்காக, அடிக்கடி கிடைக்கக்கூடிய நிர்வாகத் தரவு ஆதாரங்கள், ஜிஎஸ்டி அமைப்பிலிருந்து பெறப்படும் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்து சேவைத் துறையின் மொத்த மதிப்பு கூட்டலில், 60 சதவீதத்தைப் பிரதிபலிக்கின்றன. இருப்பினும், அரசின் முக்கியப் பணிகள், சந்தை சாராத செயல்பாடுகள், ஜிஎஸ்டி வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சேவைகள் ஆகியவை தற்போதைய கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை.

இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், முழுமையான சேவைத் துறை குறியீட்டை உருவாக்கவும், சேவைகளுக்கான உற்பத்திக் குறியீட்டின் வரையறையில் மேலும் விரிவுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சேவை உற்பத்தி குறியீட்டின் வரையறையை விரிவுபடுத்துவது குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319661&reg=3&lang=1&_gl=1 

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320919) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी