பாதுகாப்பு அமைச்சகம்
12-வது தேசிய கடல்சார் தேடல், மீட்புப் பயிற்சியை, பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 6:09PM by PIB Chennai
இந்திய கடலோரக் காவல்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாரெக்ஸ்-2026 என்ற தேசிய கடல்சார் தேடல், மீட்புப் பயிற்சியை, அக்டோபர் 7, 26 அன்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைக்கிறார்.
மேலும், அக்டோபர் 8, 26 அன்று பாராதீப் கடற்கரையில் நடைபெறும் தேடல், மீட்பு நடவடிக்கைகளின் செயல்விளக்கத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
இந்தப் பயிற்சியில், 30 நாடுகளைச் சேர்ந்த, 32 பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைந்த நெறிமுறைகள், உத்திசார் முக்கியத்துவம், உலகளவிலான ஒருங்கிணைப்புத் திறனை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய, மிகவும் சிக்கலான தேடல், மீட்புப் பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதில் 15 கடலோரக் காவல்படைக் கப்பல்கள், இரண்டு டோர்னியர் விமானங்கள், மூன்று மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், ஒரு சேதக் ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையின் சி-130 ஜே, எம்ஐ-17 ரக விமானங்கள், இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்கள், குடிமை/அரசு சொத்துக்கள் இடம் பெறுவதுடன், கடற்கரை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி, ஒரே நேரத்தில், வான்வழி, கடல்சார் இடர்பாடுகளை உள்ளடக்கிய, மாபெரும் மீட்பு நடவடிக்கையை உருவகப்படுத்தும் வகையில் நடைபெறவுள்ளது. இதில், 228 பயணிகளுடன் ஒரு பயணிகள் விமானம் கடலில் இறக்கப்பட்டு, எம் வி ஜும்பா என்ற கன்டெய்னர் கப்பலுடன் மோதி மீட்புப் பணி ஒத்திகை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319740®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320913)
வருகையாளர் எண்ணிக்கை : 9