PIB Backgrounder
azadi ka amrit mahotsav

தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர்- பழங்குடியினர் மையம்: உள்ளடக்கிய தொழில்முனைவுக்கு வலுசேர்த்தல்

1,90,414 பயனாளிகள், 54,499 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 10:43AM by PIB Chennai

தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் - பழங்குடியினர் மையம் (NSSH), ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்களது தொழில் திறன்களை மேம்படுத்தி, விரிவான சந்தை வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவு அளித்து வருகிறது. நிதி, தொழில்நுட்பம், பயிற்சி, வழிகாட்டுதல், சந்தை இணைப்பு ஆகிய துறைகளில் வழங்கப்படும் ஆதரவுகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கான முக்கியத் தடைகளை இத்திட்டம் களைகிறது. அரசு கொள்முதலில் கவனம் செலுத்துவதன் மூலம், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை கொள்முதல் அமைப்புகளுடன் இணைக்கிறது.

2016 அக்டோபர் 18-ம் தேதி தொடங்கப்பட்ட தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர்- பழங்குடியினர் மையத் திட்டம், தேசிய சிறு தொழில்கள் கழகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் மேம்பாடு, கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் தொழில்முனைவோரின் திறன்களை மேம்படுத்துகிறது. 2026 ஜூலை 31 நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் 1,90,414 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 54,499 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் நடத்தும் குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து அரசு கொள்முதல் 2015-16-ல் ரூ.99.37 கோடியிலிருந்து 2025-26-ல் ரூ.4,013.42 கோடியாக அதிகரித்துள்ளது.

2025-26-ல் 12,524 குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து ரூ.4,013.42 கோடி மதிப்பிலான கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 27 மாநிலங்களில் 47 நிறுவனங்கள் மூலம் 10,717 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் பெண்கள். நிதி ஆதரவு, சந்தைப்படுத்துதல், கடன் உத்தரவாதம், தயாரிப்புப் பரிசோதனை, ஏற்றுமதி ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் கொள்முதலில் குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் கொள்முதல் செய்யும் நடைமுறையில், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழில்முனைவோர் அரசு சந்தைகளில் போட்டித்திறன் மிக்க பங்கேற்பாளர்களாக உருவெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320514&reg=3&lang=1

***

AD/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320652) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali