ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புற சாலைத் திட்டத்தைச் சீரமைக்க புதிய தொழில்நுட்பங்கள்: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 6:54PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் 'பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டம்' குறித்து முக்கியமான ஆலோசனைக் கூட்டம் புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கிராமப்புற சாலைகளின் தரம், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு , ஜிபிஎஸ் போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ரூ.70,125 கோடி மதிப்பீட்டிலான 'பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டம் -4' திட்டத்தின் கீழ் 25,000 கிராமங்களை இணைக்க 62,500 கி.மீ தொலைவிற்கு அனைத்துப் பருவ நிலைகளுக்கும் ஏற்ற சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு முறைகள் மூலம் கிராமப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதே 'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை அடைவதற்கான முதன்மை வழி என தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320321®=3&lang=1
செய்தி அடையாள எண்:2320321
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320444)
வருகையாளர் எண்ணிக்கை : 7