பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படைத் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 6:38PM by PIB Chennai

விமானப்படையின் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும் ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித், விமானப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 அக்டோபர் 31 பிற்பகல் முதல் அமலுக்கு வரும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய விமானப்படைத் தலைமைத் தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், 2026 அக்டோபர் 31 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

1966 டிசம்பர் 9-ம் தேதி பிறந்த ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித், 1986 டிசம்பர் 6 அன்று இந்திய விமானப் படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். விமானப் படைத் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் அதன் தலைவராகவும், மத்திய விமானப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித்தின் சிறந்த சேவையைப் பாராட்டி 2006-ல் வாயு சேனா பதக்கம், 2011-ல் விஷிஷ்ட் சேவா பதக்கம், 2023-ல் அதிவிஷிஷ்ட் சேவா பதக்கம், 2026-ல் பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் முதலியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319762&reg=3&lang=1

***

TV/BK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320341) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam