பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மெதுவான வளர்ச்சியிலிருந்து லட்சியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணத்தை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:41PM by PIB Chennai

பிரதமரின் 25 ஆண்டுகால தலைமைத்துவம், இந்தியாவின் வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் எவ்வாறு கவனம் செலுத்தியுள்ளது என்பதை விளக்கி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என்.சந்திரபாபு நாயுடு எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் முதல் தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, இந்தியாவின் உலகளாவிய நிலை வரை பல்வேறு துறைகளில் எவ்வாறு பரந்த அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், இதனால் இந்தியா மெதுவான வளர்ச்சியிலிருந்து லட்சியம், தன்னம்பிக்கை கொண்ட பயணத்தை நோக்கி சென்றுள்ளதையும் திரு நாயுடு சுட்டிக்காட்டியுள்ளார்.  

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால தலைமைத்துவம், இந்தியாவின் வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என்.சந்திரபாபு நாயுடு எழுதியுள்ளார். உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் முதல் தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, இந்தியாவின் உலகளாவிய நிலை வரை பல்வேறு துறைகளில்  பரந்த அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

மெதுவான வளர்ச்சியிலிருந்து லட்சியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையைப் படிக்கவும்".

***

(Release ID: 2319974)

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320326) வருகையாளர் எண்ணிக்கை : 7