பிரதமர் அலுவலகம்
இந்திய வேளாண் துறையின் மாற்றம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 11:24AM by PIB Chennai
இந்திய வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து திரு அசோக் குலாத்தி எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். குஜராத்தின் வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து இந்திய வேளாண் துறையின் பரவலான மாற்றம் வரையிலான திரு மோடியின் 25 ஆண்டுகால பயணத்தை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. சிறந்த பாசனம், தடையற்ற மின்சாரம், ஊரகப்பகுதி சாலைகள், தொழில்நுட்பம், சந்தையணுகல் ஆகியவை விவசாயிகளின் உற்பத்தித் திறனையும், வருவாயையும் அதிகரிக்க உதவியது என்பது குறித்து இது விளக்குகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
குஜராத்தின் வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து இந்திய வேளாண் துறையின் பரவலான மாற்றம் வரையிலான பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பயணத்தை இக்கட்டுரை எடுத்துரைகிறது. சிறந்த பாசனம், தடையற்ற மின்சாரம், ஊரகப்பகுதி சாலைகள், தொழில்நுட்பம், சந்தையணுகல் ஆகியவை விவசாயிகளின் உற்பத்தித் திறனையும், வருவாயையும் அதிகரிக்க உதவியது என்பது குறித்து இது விளக்குகிறது.
தேசிய அளவில் இந்த அணுகுமுறை விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு, பயிர் பல்வகைபடுத்துதல், சிறந்த ஊரகப்பகுதி உள்கட்டமைப்பு என்று விரிவடைந்துள்ளது.
இந்திய வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விளக்கும் இக்கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். https://www.business-standard.com/opinion/columns/from-gujarat-s-agrarian-miracle-to-india-s-farm-transformation-126100601522_1.html
***
(Release ID: 2319929)
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320070)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam