சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சட்டம், நீதித்துறை சார்பில் தூய்மை பிரச்சார இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 12:42PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதித்துறை சார்பில், தூய்மை பிரச்சார இயக்கம், 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை முன்னெடுக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள சட்டம், நீதித்துறை அலுவலகங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள், கட்டிடத்தின் மேற்கூரைகள், படிக்கட்டுகள், அலுவலகத்தை சுற்றியுள்ள இடங்களில் அலுவலக ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இந்நிகழ்சியில், மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டு தூய்மைப் பணி மேற்கொண்டதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரங்கன்றுகளையும் நட்டுவைத்தார். தூய்மைப் பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிசு வழங்கி கவுரவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319479

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319767) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी