தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி யஷோபூமியில் நடைபெறவுள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டிற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தீவிரம் - மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 9:00PM by PIB Chennai

இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டிற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, இன்று புதுதில்லி, துவாரகாவில் உள்ள யஷோபூமி வளாகத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த மாநாட்டை அக்டோபர் 8, 2026 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறவுள்ளப் பகுதியை பார்வையிட்ட அமைச்சர், இதில் பங்கேற்கும் புத்தொழில் நிறுவனங்கள், கண்காட்சியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், தொலைத்தொடர்புத் துறை, செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம், கூட்டு  அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், இந்த மாநாட்டின் பிரம்மாண்டம், தொலைநோக்குப் பார்வை, உலகளவிலான முக்கியத்துவம் குறித்து செய்து ஊடகங்களிடம் விளக்கமளித்தார்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் 10-வது பதிப்பு நடைபெறவுள்ளது. மிகுந்த உற்சாகம், ஆற்றல், சிறந்த திறன்கள், நிரூபிக்கப்பட்ட இந்திய தொலைத்தொடர்பு இணைப்பு மாதிரி ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319395&reg=3&lang=1

***

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319643) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी