பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக்குழு பிரிவில் தங்கம் வென்ற கமல்ஜீத், சுருச்சி இந்தர் சிங் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 11:59PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக்குழு பிரிவில் சிறந்த செயல்பாட்டுடனும் புதிய ஆசிய சாதனையுடனும் தங்கப்பதக்கம் வென்ற கமல்ஜீத், சுருச்சி  இந்தர் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய உறுதிப்பாடு நாட்டிற்கு பெரும் பெருமிதம் அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர்களது எதிர்கால பயணத்திற்கு தமது வாழ்த்துக்களை திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"புதிய ஆசிய சாதனையுடன் சிறந்த செயல்பாடு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக்குழு பிரிவில் தங்கம் வென்ற கமல்ஜீத், சுருச்சி இந்தர் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களுடைய உறுதிப்பாடு நாட்டிற்கு பெரும் பெருமிதம் அளித்துள்ளது. எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315282&reg=3&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2319564) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam