இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 11:53PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மல்யுத்தப் போட்டியில், ஆடவர் கிரிகோ-ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சுனில் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022-ல் பெற்ற வெற்றியை மீண்டும் உறுதிசெய்யும் வகையில், சிறப்பான திறனை வெளிப்படுத்தி, சுனில் குமார் பதக்கம் வென்றதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது செயல்பாடு, இந்திய மல்யுத்த விளையாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மேலும் பல பெருமைகளை சேர்ப்பதற்கும், தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும், சுனில் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில், சுனில் குமாருக்கு வெண்கலப் பதக்கம்!
2022-ல் பெற்ற வெற்றியை மீண்டும் உறுதிசெய்யும் வகையில், மல்யுத்தத்தில், ஆடவர் கிரிகோ-ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில், சிறப்பான வெற்றியுடன் அவர் பதக்கம் வென்றுள்ளார்.
வாழ்த்துகள் சுனில்! இது ஒரு சிறந்த செயல்பாடாகவும், இந்திய மல்யுத்த விளையாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளது. அவர் நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைத் தொடர்ந்து சேர்க்க வேண்டும்: பிரதமர்".
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317393®=48&lang=1
***
TV/LN/GS