புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
குடும்பங்களின் வாகனப் பயன்பாடு குறித்த தேசிய அளவிலான ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 4:00PM by PIB Chennai
குடும்பங்களின் வாகனப் பயன்பாடு குறித்து முதல்முறையாக, அகில இந்திய அளவிலான கணக்கெடுப்பை, தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்தியது. இதில், 14,274 கிராமங்கள்,10,377 நகர்ப்புறப் பகுதிகளும் அடங்கும். இந்தக் கணக்கெடுப்பில் 4,92,023 குடும்பங்களைச் சேர்ந்த, மொத்தம் 20,34,371 நபர்களிடமிருந்து பெறப்பட்டத் தகவல்களைச் சேகரிக்கப்பட்டது.
குறிப்பிட்ட பணியிடங்களுக்குச் செல்வதற்கு, இருசக்கர வாகனங்கள் முதன்மையான வாகனமாக உள்ளன. 42.6% பணியாளர்கள் இவ்வகையான வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.
இரவு நேரங்களில், குடும்பங்கள் மேற்கொள்ளும் வகையிலான பயணங்கள் பெரும்பாலும், சமூக,மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக உள்ளன. இதற்குப் பேருந்துகள் முதன்மைப் போக்குவரத்து முறையாக உள்ளன.
87.6% மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களை 30 நிமிடங்களுக்குள் சென்றடைகின்றனர். அதேவேளையில், 83.4% பணியாளர்கள், தங்களது குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கின்றனர்.
குறிப்பிட்ட பணியிடத்திற்குச் செல்வதற்கான சராசரி மாதச் செலவு, ஒரு பணியாளருக்கு தலா ரூ 785 ஆக உள்ளது. கிராமப்புறப் பணியாளர்களின் சராசரி மாதச் செலவு ரூ 612 ஆக இருக்கும் நிலையில், நகர்ப்புறப் பணியாளர்களின் செலவு ரூ 1,044 ஆக கணிசமான அளவில் அதிகரித்து உள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய புள்ளியியல் அலுவலகம், ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான கால கட்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது 'குடும்பங்களின் வாகனப் பயன்பாடு குறித்த தேசிய அளவிலான கணக்கெடுப்பின்' முக்கியக் குறியீடுகள் தொடர்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம், 1 கி மீட்டருக்கும் அதிக தொலைவில் செல்வதை பயணம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
மண்டலப் போக்குவரத்துத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் ஆகியவற்றுக்குத் துணையாக அமையும் வகையில், உள்நாட்டுப் பயண முறைகள், அதன் செயல்பாடுகள் குறித்த வலுவான, தரவு சார்ந்த நுண்ணறிவுகளைப் பெறுவதே இந்தக் கணக்கெடுப்பின் முதன்மை நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319180®=3&lang=1&_gl=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319472)
வருகையாளர் எண்ணிக்கை : 8