சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அரசின் கல்வி ஊக்கத்தொகை மூலம் முனைவர் பட்டம் பெற்று ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் பெண்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 4:37PM by PIB Chennai
அரியான மாநிலம், பரிதாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா ராணி. 35 வயதான இவர், பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆய்வு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 2019-ம் ஆண்டு முதல் கல்வி ஊக்கத்தொகை பெற்றார். சுமார் 18 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்றுள்ள பிரதிபா ராணி வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதைதொடர்ந்து, இவருக்கு கல்வி நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த வருமானத்தின் மூலம் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி வருகிறார். மத்திய அரசின் ஊக்கத்தொகை தனக்கு பொருளாதார சிக்கலை தீர்த்து வைத்ததுடன், உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற கனவு நனவானதாகவும் பிரதிபா ராணி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319191®=3&lang=1
***
TV/ LN/ SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319343)
வருகையாளர் எண்ணிக்கை : 5