புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னையில், காற்றாலை எரிசக்தி கண்காட்சி - மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 6:24PM by PIB Chennai

இந்தியாவின் முதன்மையான விண்டர்ஜி இந்தியா - காற்றாலை எரிசக்தி கண்காட்சியின்  8-வது பதிப்பை, 2026 அக்டோபர் 8 அன்று சென்னை வர்த்தக மையத்தில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி, தொடங்கி வைக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, உத்திசார் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இதன் பிரம்மாண்டமான தொடக்க விழாவில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், தமிழ்நாடு  எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், காற்றாலை எரிசக்தி சங்கங்கள், இத்துறையின் முக்கியப்  பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

2025-26-ம் நிதியாண்டில், இந்தியா சாதனை அளவாக 6.05 ஜிகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது. இதன் மூலம், ஆகஸ்ட் 2026-க்குள் மொத்த உற்பத்தித் திறன் 58.52 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2030-க்குள் 100 ஜிகாவாட் என்ற இலக்கை அடையும் வகையில், தற்போது 28 ஜிகாவாட் அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319302&reg=3&lang=1

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319340) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati