தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகாரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 5:03PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், பீகார் மாநிலம், பாட்னாவில் 2026 அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் பொது  விசாரணை, முகாம் அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த முகாமில் விசாரணை நடத்தப்பட உள்ளது. முதல்நாள் நடைபெறும் அமர்வில், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி ராமசுப்ரமணியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்துகின்றனர். 2-ம் நாளன்று, இரண்டு அமர்வுகள் மூலம் விசாரிக்கப்பட உள்ளன. மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, பொது சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319221&reg=3&lang=1&_gl=1

***

SS/LN/ RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319336) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी