அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பதப்படுத்திகள் பாக்டீரியாக்களை அழிக்கும் செயல்முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 3:17PM by PIB Chennai

பதப்படுத்தும் பொருட்கள் மூலம் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதை, விஞ்ஞானிகள் முதல் முறையாகப் பதிவு செய்துள்ளனர். மேம்பட்ட படமெடுப்பு முறை, வேதியியல் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி, பதப்படுத்தும் பொருட்கள் பாக்டீரியா செல்களை உள்ளிருந்தே எவ்வாறு சீர்குலைக்கின்றன என்பதை இந்தக் குழு வெளிப்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றம், வீடு, தனிநபர் பராமரிப்புப் பிரிவுகளில் பாதுகாப்பான தொழில்நுட்பங்களை வடிவமைப்பதற்கான வழியை உருவாக்குகிறது.

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பெங்களூரு யூனிலீவர் ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, இது தொடர்பாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு, கிராம்-பாசிட்டிவ் ஸ்டேஃபிளோகாக்கஸ் ஆரியஸ், கிராம்-நெகட்டிவ் சூடோமோனாஸ் ஏருகினோசா ஆகிய இரண்டு பாக்டீரியா நோய்க்கிருமிகளில், பதப்படுத்தியால் தூண்டப்பட்ட செல்லுலார், உயிர்வேதியியல் எதிர்வினைகளை ஆராய்ந்தது.

இதன் மூலம் பதப்படுத்திகள் பாக்டீரியாக்களைப் பல வழிகளில் தாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்குச் சரியான வகையிலான பதப்படுத்தும் பொருட்களை தேர்ந்தெடுக்கவும், அவை, வீணாவதை குறைக்கவும் தொழில்துறைக்கு உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313879&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319333) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी