சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமத்திலிருந்து ஆராய்ச்சி வாழ்க்கை வரை - என்எஃப்எஸ்சி ஆதரவால் முன்னேறிய ஆராய்ச்சி மாணவர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 3:05PM by PIB Chennai

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 30 வயதான ஆய்வு மாணவர் சாகர் கோடிக்கு, உயர்கல்வியைத் தொடர்வது என்பது வெறும் தனிப்பட்ட லட்சியம் மட்டுமல்ல. அது தன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும், தன் சமூகத்திற்குப் பங்களிப்பதற்குமான ஒரு  இலக்காக இருந்தது.

கிராமப்புறத்தைச் சேர்ந்த சாகர், தரமான உயர்கல்வியைப் பெறுவதில் நிதி, புவியியல் ரீதியான தடைகளை எதிர்கொண்டார். தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் யுஜிசி-நெட் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்குத் தகுதிபெற முயன்றார். ஆனால் தகுதி மதிப்பெண்ணை இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் தவறவிட்டார்.

தனது கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற உறுதியுடன், அவர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இருப்பினும், அந்த சொற்ப நிதியுதவி, அவரது ஆராய்ச்சிச் செலவுகளைச் சமாளிப்பதற்குப் போதுமானதாக இல்லை.

பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகைத் திட்டமான என்எஃப்எஸ்சி-யின் கீழ் உதவி பெற்றது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவருக்கு 27 டிசம்பர் 2019 முதல் 15 மே 2024 வரை இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை, முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகை ஆகிய இரண்டின் மூலமும் ஆதரவு அளிக்கப்பட்டது. அவர் கடைசியாகப் பெற்ற உதவித்தொகைத் தொகை ₹42,000 ஆகும்.

இந்த உதவித்தொகை, சாகர் தனது முனைவர் பட்டப் படிப்பைத் தொடர உதவியது. அது அவரது கல்வி, ஆராய்ச்சிச் செலவுகளைச் சமாளிக்க உதவியதுடன், அவரது குடும்பத்தின் தேவைகளுக்கும் பங்களித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313875&reg=3&lang=1  

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319328) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada