அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரகாசமான ஒளிக்கற்றைகளிலிருந்து உருவாகும் புதிய எக்ஸ் கதிர்கள் வீண்மீன்களின் ஆற்றல் குறித்தத் தகவல்களைப் பெற உதவுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 2:38PM by PIB Chennai
விண்வெளி ஆய்வாளர்கள், அதிக ஆற்றல் கொண்ட பிரகாசமான ஒளிக்கற்றைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளைக் கண்காணித்தனர். இந்த ஆற்றல்மிக்க ஒளிக்கற்றையிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் புதிய தரவுகள் குறித்தத் தடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வானில் உள்ள இயற்பியல் சார்ந்த சூழல்கள் குறித்த ஆய்வுக்கு இத்தகையத் தரவுகள் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்மீன் கூட்டங்கள் ஆற்றலைப் பெறுவது குறித்தத் தரவுகளை அறிந்துகொள்வதற்கும் இது உதவிடும் என்று கருதப்படுகிறது.
விண்வெளி சார்ந்த பல்வேறு அறிவியல்பூர்வ உண்மைகளை அறிந்துகொள்வதன் மூலம் அண்டவெளியில் உள்ள கருந்துளை மீது மோதும் இத்தகைய ஒளிக்கற்றைகள் மூலம் மிகப்பெரிய அளவிலான ஆற்றல் வெளிப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் துகள்களின் சக்திவாய்ந்த நீரோட்டத்தன்மை நேரடியாக பூமியை நோக்கி செலுத்தப்படுவதன் மூலம் இந்த ஒளிக்கற்றைகள் அசாதாரண பிரகாசமாகத் தோற்றமளிக்கும். மேலும் அவற்றின் எக்ஸ் கதிர் சார்ந்த நிறமாலைகளில் வெளிப்படும் எக்ஸ் கதிர்வீச்சுகள் அதிக ஆற்றல் கெண்டதாக உள்ளது.
இத்தகைய கதிர்வீச்சுகள் மூலம் விண்மீன்கள் ஆற்றலைப் பெறுவது குறித்தத் தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314819®=48&lang=2
***
TV/SV/RJ/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319303)
வருகையாளர் எண்ணிக்கை : 3