புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 4:00PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்:
சமூக சந்திப்புகள் உள்நாட்டுப் பயணங்களுக்கு வழிவகுக்கின்றன.
வணிகப் பயணங்களுக்கான செலவினம் உச்சபட்ச அளவில் பதிவாகியுள்ளது.
சுற்றுலாவுக்கு, புனித யாத்திரை, மதம் முதன்மை நோக்கமாக உருவெடுக்கிறது.
ஒரு பார்வை:
கடந்த 365 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 100 இரவுநேரப் பயணங்களில், சுமார் 48 பயணங்கள் 'புனித யாத்திரை, சமய' நோக்கங்களுக்காகவும், அதைத் தொடர்ந்து 30 பயணங்கள் 'சுகாதாரம், மருத்துவ' நோக்கங்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படும் உள்நாட்டு சுற்றுலா செலவின ஆய்வு என்பது, முக்கியமாக பயணத்தின் கால அளவு, போக்குவரத்து முறை, தங்கும் இடத்தின் வகை, பயணச் செலவுகள் போன்ற உள்நாட்டு இரவு நேரப் பயணங்களின் விவரங்களைப் பதிவு செய்கிறது. கூடுதலாக, உள்நாட்டு ஒரு நாள் பயணங்கள், அவற்றுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் குறித்த சில தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
தற்போதைய இந்த ஆய்வு, தேசிய புள்ளியியல் ஆய்வின் 80-வது சுற்றின் ஒரு பகுதியாக, ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை நடத்தப்பட்டது . புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், இந்த ஆய்வின் முடிவுகளை 'இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலா' என்ற தலைப்பிலான அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் நோக்கங்கள், உள்ளடக்கம், வழிமுறை, முக்கியக் கண்டுபிடிப்புகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு, தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை எண் 597 'இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலா' என்ற அறிக்கையை பார்க்கவும். இது புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளமான https://www.mospi.gov.in -ல் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313894®=3&lang=1
***
TV/PLM/RJ