இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 2:39PM by PIB Chennai
விண்மீன் மண்டலங்களின் மையத்தில் உள்ள கருந்துளைகள் அவற்றைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இறுதியில் விண்மீன் மண்டங்களின் செயல்பாடுகளை வடிவமைக்கக் கூடிய வழிமுறைகளை வானவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விண்மீன் மண்டலங்கள் குறித்த நமது சிந்தனைகள் அழகிய சுருள் வடிவத்திற்குள் மின்னும் நட்சத்திரங்களின் திரள்கள், தூசுகள் மட்டுமே கண்முன் தோன்றுகின்றன. ஆனால் அத்தகைய விண்மீன் மண்டலங்களுக்கு அப்பால், 10 முதல் 20 மடங்கு வரை பரவியுள்ள வாயு பரப்பு காணப்படுகிறது. இந்த வாயு மண்டலம், பிளாஸ்மா என்று அழைக்கப்படுகிறது. விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான ஆற்றலை இந்தப் பிளாஸ்மா வழங்குகிறது. விண்மீன் மண்டலங்களின் மையப் பகுதியில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகள், வெளியிடும் ஆற்றல், வாயுக்கள் குளிர்ச்சியடைந்து நட்சத்திரமாக சுருங்குவதைத் தடுக்கும் என்று வானவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் இடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமான ராமன் ஆய்வு நிறுவனம், அரிசோனா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் குழு விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியில் உள்ள பிளாஸ்மா மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314820®=48&lang=2
***
TV/SV/RJ/RJ