பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை: நிலுவையில் உள்ள விவகாரங்களை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கம் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 1:41PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையால் இம்மாதம் 16-ம் தேதி அன்று நிலுவையில் உள்ள விவகாரங்களை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஓய்வூதிய துறையால், நடப்பாண்டிற்கான இந்தச் சிறப்பு இயக்கத்தின் 6-ம் கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு விரைந்து தீர்வு காண்பது ஆவண மேலாண்மை, தூய்மை நடைமுறைகளை நிரந்தரமாக மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு தூய்மை இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் இணைந்து இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 21 தூய்மைப் பணிக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314791&reg=3&lang=1

***

TV/SV/RJ/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319283) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी