அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பணியிடங்களில் தூய்மையை வலியுறுத்தும் தூய்மையே சேவை இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 1:52PM by PIB Chennai
பணியிடங்களில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், 2026 செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்ட நடப்பாண்டிற்கான தூய்மையே சேவை பிரச்சாரத்தில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், நாடு முழுவதும் அமைந்துள்ள இந்திய நில அளவைத் துறையின் அலுவலகங்கள் முழுவீச்சில் பங்கேற்றுள்ளன.
தூய்மை, சுகாதாரம், துப்புரவுப் பணியாளர்களின் கண்ணியம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும், சுத்தமான, ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் அதிகாரிகள், 2026 செப்டம்பர் 18 அன்று, துரைச் செயலாளர் தலைமையில், தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தூய்மைப் பணிகளில் முனைப்புடன் பங்கேற்று, தூய்மை, சுகாதாரம், நிலையான துப்புரவுப் பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப மாளிகை, அறிவியியல் கூடம் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட தூய்மை இலக்கு அலகுகளில, தூய்மை, விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றிணைந்து என்ற நாடு தழுவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2026 அக்டோபர் 1 அன்று புதுதில்லி ஆர் கே புரத்தில் உள்ள அறிவியியல் கூடத்தில், தன்னார்வத் தூய்மைப் பணி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319076®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319218)
வருகையாளர் எண்ணிக்கை : 8