அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தன்னிடம் பயின்ற மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 4:54PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (04.10.2026) தமது புதுதில்லி இல்லத்தில், ஜம்முவைச் சேர்ந்த, தில்லியில் உள்ள மருத்துவ முன்னாள் மாணவர்கள் குழுவினருடன் மதிய உணவுடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர், டாக்டர் ஜிதேந்திர சிங் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகளில் அவரது மாணவர்களாக இருந்தவர்கள் ஆவர்.
இந்த நிகழ்வு, வெற்றிகரமான மருத்துவத் தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, தற்போது தில்லி பகுதியில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தது.
முழுநேரப் பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பு, ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியுடனான தமது தொடர்பை நினைவுகூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், தமது மாணவர்களின் முன்னேற்றத்தைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
இந்த நிகழ்வில், பொது மருத்துவம், நரம்பியல், நுரையீரல் மருத்துவம், புற்றுநோயியல், மனநல மருத்துவம், மருந்தியல், குழந்தை மருத்துவம், இரைப்பைக்குடல் மருத்துவம், கல்லீரல் மருத்துவம், கதிரியக்கவியல், கண் மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318893®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319157)
வருகையாளர் எண்ணிக்கை : 7