சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உயர்தரமான நெடுஞ்சாலை கட்டமைப்புகளை வடிவமைப்பது குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏக்தா நகரில் நடத்துகிறது சாலைப் போக்குவரத்து அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 12:14PM by PIB Chennai
சாலைப் போக்குவரத்து அமைச்சகம், நாட்டில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் மேம்பாடு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய, மாநில முகமைகளின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பயிலரங்கத்தை, 2026 அக்டோபர் 5, 6 தேதிகளில் குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம், ஏக்தா நகரில் நடத்தவுள்ளது.
நாளை (2026 அக்டோபர் 5) நடைபெறும் தொடக்க அமர்வில், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மாநிலங்களின் சாலைப் போக்குவரத்து, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், மாநில பொதுப்பணித்துறைகளின் மூத்த அதிகாரிகள், உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பங்கேற்பு, மத்திய-மாநில ஒருங்கிணைப்புக்கும், கள அளவிலான அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், நடைமுறைத் தீர்வுகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதற்கும் வழிவகுக்கும். இந்த இரண்டு நாள் மாநாட்டில், நெடுஞ்சாலைத் துறையில் திட்டச் செயலாக்கம், தரம், பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்துவதல் ஆகியவை குறித்து விவாதிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318843®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319145)
வருகையாளர் எண்ணிக்கை : 6