பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் நாளை ஓய்வூதியதாரர்கள் குறை தீர்ப்பு முகாம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகிக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 1:57PM by PIB Chennai
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் என்பது மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் குறைகளை உடனடியாகத் தீர்ப்பதற்காக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியதாரர்கள் நலத்துறையால் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முன்முயற்சியாகும். இது, ஒரு குறிப்பிட்ட வகை குறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, நீண்டகாலமாக நிலுவையில் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது. இது "அரசின் முழுமையான அணுகுமுறை" என்ற கருத்தின்படி செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு திறன்வாய்ந்த, செலவு குறைந்த குறைதீர்ப்பை வழங்குகிறது. இது வழக்குகளைக் குறைப்பதற்கான மத்திய அரசின் ஒரு உறுதிப்பாடாகும்.
2017-ல் ஓய்வூதியத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்கள் சிக்கலான, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையாக உருவெடுத்துள்ளன. 71.79% வெற்றி விகிதத்துடன், இந்த முன்முயற்சியானது, அதன் முந்தைய 16 பதிப்புகளில் மொத்தம் 28,797 குறைகளில் 20,676 குறைகளை உடனடியாகத் தீர்த்து வைத்துள்ளது. மீதமுள்ள குறைகளும், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆய்வுக் கூட்டங்கள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளன.
இந்த முன்முயற்சியைத் தொடரும் வகையில், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 17-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமை, மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், நாளை (05.10.2026) புது தில்லியில் நடத்துகிறது.
இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் ஓய்வூதியதாரர்களின் 897 குறைகள் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318868®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318917)
வருகையாளர் எண்ணிக்கை : 7