வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வர்த்தக அமைப்பின் மீன்வள மானிய ஒப்பந்தம் தொடர்பாக இணைவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 11:58AM by PIB Chennai

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், உலக வர்த்தக அமைப்பின் மீன்வள மானியங்கள் ஒப்பந்தம்: சட்டக் கட்டமைப்பு, கொள்கை வாய்ப்புகள் என்ற தலைப்பில் 2026 செப்டம்பர் 21 அன்று இணையவழிக் கருத்தரங்கை நடத்தியது. உலக வர்த்தக அமைப்பின் மீன்வள மானியங்கள் குறித்த ஒப்பந்தத்தை இந்தியா அங்கீகரித்ததை அடுத்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச வர்த்தக சட்ட நிபுணர்கள், மீன்வள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஓராண்டிற்குப் பிறகு அதன் செயல்பாடு குறித்தும், அதிகப்படியான உற்பத்தித் திறன், அதிக அளவிலான மீன்பிடிப்புத் தொடர்பான கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

மீன்வள மானியங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை திறன்மிக்க வகையில் செயல்படுத்த நம்பகமான மீன்வளத் தரவுகள், வலுப்படுத்தப்பட்டக் கண்காணிப்பு, நிறுவன ஒருங்கிணைப்பு, போதுமானத் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த இணையவழிக் கருத்தரங்கு எடுத்துரைத்தது.

வளரும் நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகளுக்கு, உலக வர்த்தக அமைப்பின் வழிமுறைகள் உட்பட தொடர்ச்சியான திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவியின் தேவைக் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313748&reg=3&lang=1

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317981) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी