ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சிறப்பு தூய்மை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் நில வளங்கள் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 2:11PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலவளங்கள் துறை, தூய்மை பணி தொடர்பான சிறப்பு இயக்கம் 6.O மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. மின்னணு கழிவுகளை அகற்றுதல், நிலுவையில் உள்ள தூய்மை பணிகள், இதுதொடர்பான புகார்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குமுன் சிறப்பு இயக்கம் 5.O மூலம், தூய்மைப் பணி குறித்த 16 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களின் புகார்களுக்கு 100 சதவீதம் தீர்வு காணப்பட்டதாகவும் நில வளங்கள் துறை தெரிவித்துள்ளது. தூய்மை பணி தொடர்பாக 2,415 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தூய்மையக்கான தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், பொது இடங்கள் ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது குறித்து இந்த இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணியிடங்கள், இருப்பிடங்களில் உள்ள தேவையற்ற பொருட்கள், மின்னணு கழிவுகள் போன்றவற்றை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317553&reg=3&lang=1

 

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317916) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी