சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தில் கவுரவிக்கப்பட்ட கொடையாளர்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 2:15PM by PIB Chennai

தேசிய தன்னார்வ ரத்ததான தினம் 2026 புதுதில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மருத்துவர் ஸ்ரீனிவாஸ், தன்னார்வலர்கள் அதிகளவில் ரத்ததானம் செய்தபோதும், பொதுமக்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என குறிப்பிட்டார். எனவே, ரத்ததானம் செய்வதின் நன்மைகள், பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். நாடுமுழுவதும் தன்னார்வலர்கள் மூலமே 75 சதவீத ரத்த தானம் பெறப்படுவதாகவும் கூறினார். ரத்தானம் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு குறித்தும் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ரத்ததானத்தின் அவசியம் குறித்து, தொடர்ச்சியாக ரத்தான முகாம்களை நடத்துதல், தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. ரத்ததானம் பெறுவதில் மாநில ரத்ததான குழுக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்தவகையில், அதிக ரத்ததானம் வழங்கிய மாநிலங்களில் அரியானா முதலிடத்திலும், உத்தரகாண்ட் மாநிலம் 2-வது இடத்திலும், பஞ்சாப் 3-ம் இடத்திலும் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம் முதலிடத்திலும், சிக்கிம் 2-ம் இடத்திலும் உள்ளன. யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை சண்டிகர் முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317557&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317866) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali