சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 1:29PM by PIB Chennai

பிசிஆர் எனப்படும் பொது உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை சிறந்த முறையில் செயல்படுத்த மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதற்காக கடந்த 3 நிதியாண்டுகளில் 1423 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.  இந்த சட்டங்களை வலுப்படுத்தும் வகையில், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், பாதிக்கப்பட்ட நபருக்கு மறுவாழ்வு அளிப்பது, சமூக இணக்கம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 217  சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317515&reg=3&lang=1

 

***

TV/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2317835) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati