பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜுவல் ஓரம் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 11:17AM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜுவல் ஓரம் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். பழங்குடியின மாணவர்களின் கல்வி, நலம், உண்டு உறைவிடப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பழங்குடியினர் மேம்பாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர் ஜுவல் ஓரம், பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, உள்ளூர் முதலீட்டாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் பகுதிக்கு செல்லும் அமைச்சர், அங்கு மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, உத்தரகாண்டின் பாஸ்பூர், காதிமா ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317440&reg=3&lang=1

***

TV/LN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317791) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी