சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளராக திரு நரேந்திர பூஷன் பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 11:21AM by PIB Chennai

உத்தரப் பிரதேச பிரிவைச் சேர்ந்த 1992-ம் ஆண்டு தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு நரேந்திர பூஷன், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

திரு பூஷன், மத்திய, மாநில அரசுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார். எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில், விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, நிதி, நில வள மேலாண்மை ஆகிய துறைகளில் பரந்த அனுபவத்தைப் பெற்றவர். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத் துறையின் செயலாளராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து, அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317443&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317777) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati