ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகத்தின் சார்பில், தூய்மை இயக்க முன்முயற்சிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 1:23PM by PIB Chennai
ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சணல் கழகம் தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஒடிசாவின் பத்ரக்கில் தனது அலுவலகப் பகுதியில் தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது.
இதன் ஒரு பகுதியாக, இந்த நிறுவனத்தின் குழுவினர் வீடுகளுக்கும் அருகிலுள்ள உள்ளூர் பகுதிகளுக்கும் சென்று, சமூகத்திடமிருந்து கழிவுப் பொருட்களைச் சேகரித்தனர். தூய்மையின் முக்கியத்துவம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, நிறுவனங்களின் ஊழியர்களால் பயனுள்ள அலங்காரப் பொருட்களாகப் படைப்பாற்றலுடன் மாற்றப்பட்டன.
ஜவுளி அமைச்சகத்தின் தேசிய சணல் வாரியம், தனது அலுவலக வளாகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்காக ஒரு விரிவான சுகாதாரப் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முகாம் இஎஸ்ஐசி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
பொறுப்பான கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக, மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, 29 செப்டம்பர் 2026 அன்று தனது அலுவலகங்கள் முழுவதும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பருத்திக் கழகம் ஏற்பாடு செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317514®=3&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317771)
வருகையாளர் எண்ணிக்கை : 6