அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால், ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டத்தின் கீழ் முன்மொழிவுகளுக்கான அழைப்புகள் நிறுத்தப்பட்டது தொடர்பான விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 1:05PM by PIB Chennai
நேற்று (2026 செப்டம்பர் 30) வெளியான ஒரு குறிப்பிட்ட ஊடகச் செய்தியில், நிதிப் பற்றாக்குறையே தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான முன்மொழிவு அழைப்பு நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அது தவறான தகவல். தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் அறிவித்தபடி, முற்றிலும் "நிர்வாகக் காரணங்களுக்காக" மட்டுமே தனது அழைப்பை நிறுத்தியுள்ளது. பெருமளவிலான திட்ட முன்மொழிவுகள் குவிந்ததன் காரணமாக, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஒரு இடைநிறுத்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தது. அதன்படி முன்மொழிவுகளுக்கான அழைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 2026 செப்டம்பர் 30 வரை பெறப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் மதிப்பீடு செய்த பிறகு, இந்த அழைப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படும். முதலீட்டுக் குழுவும் (IC) தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமும் மதிப்பீட்டுச் செயல்முறையை விரைவாக முடிக்க பணியாற்றி வருகின்றன. நிதிக்குப் பற்றாக்குறை ஏதும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317509®=3&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317722)
வருகையாளர் எண்ணிக்கை : 5