பாதுகாப்பு அமைச்சகம்
பிலிப்பைன்ஸின் சுபிக் விரிகுடாவில் ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 6:11PM by PIB Chennai
ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியின் இரண்டாம் பதிப்பு, 2026 செப்டம்பர் 28 அன்று பிலிப்பைன்ஸின் சுபிக் விரிகுடாவில் தொடங்கியது. இதில் இந்தியக் கடற்படைக் கப்பல்களான 'சஹ்யாத்ரி', 'குலிஷ்' ஆகியவற்றுடன் ஆசியான் உறுப்பு நாடுகளின் கடல்சார் படைகளும் பங்கேற்றன. "நம்பிக்கையில் வேரூன்றி, கடலில் ஒன்றிணைதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்தப் பயிற்சி, பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் கடல்சார் படைகளை தொழில்முறை, செயல்பாட்டு மற்றும் சமூக ரீதியான செயல்பாடுகளுக்காக ஒன்றிணைக்கிறது.
பயிற்சியின் தொடக்க விழாவில் பிலிப்பைன்ஸிற்கான இந்தியத் தூதர் திரு ஹர்ஷ் குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
துறைமுகங்கள் சார்ந்த பயிற்சிகள் துறைசார் நிபுணர்களுடனான கருத்துப் பரிமாற்றங்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், சமூக ஈடுபாடு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும். இதனைத் தொடர்ந்து, கடலில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக, பயணத்திற்கு முந்தைய விளக்கவுரை அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக் கட்டம், தொழில்முறை புரிதல், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, ஒன்றிணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317206®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317379)
வருகையாளர் எண்ணிக்கை : 10