சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லியில் திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி அட்டவணைக்கு காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 6:13PM by PIB Chennai
தேசிய தலைநகர் பகுதியான தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றின் காற்றுத் தரம் குறித்து விவாதிக்க, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம், அந்த ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையில் நேற்று (28.09.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய தலைநகர் பகுதிக்கான தற்போதுள்ள தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டமான ஜிஆர்ஏபி (GRAP) அட்டவணையில் திருத்தங்களுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதில் தூசி தடுப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து தொடர்பான தொடர் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் ஆகியவை கடுமையாக மேற்கொள்ளப்படும்.
2026-27-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் தொடர்பாக, தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் பசுமையாக்குதல், மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் ஆணையம் ஆய்வு செய்தது. 4,60,54,740 மரக்கன்றுகள் நடுவதற்கான ஒட்டுமொத்த இலக்கில், 22.09.2026 நிலவரப்படி 4,13,68,929 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கும், தோட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316597®=3&lang=1
----
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317183)
வருகையாளர் எண்ணிக்கை : 6