நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த ஊராட்சிகள் தொடர்பான தேசியப் பயிலரங்கை நடத்தியது நித்தி ஆயோக்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 5:40PM by PIB Chennai

நித்தி ஆயோக், அசாம் அரசின் கோலப் போர்போரா மாநில பஞ்சாயத்து - ஊரக வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, நேற்று (2026 செப்டம்பர் 28) “வளர்ச்சியடைந்த ஊராட்சிகள்: மக்கள், இடங்கள், வளங்கள், வாய்ப்புகளை இணைத்தல்” என்ற தலைப்பில் ஒரு தேசியப் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கானது, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திறன் வாய்ந்த பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.  நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்ட நிறுவனங்களாகப் ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஒரு நாள் தேசியப் பயிலரங்கில், அசாம் அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு அதுல் போரா, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ஆர். பாலசுப்பிரமணியம், அசாம் மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் ரவி கோட்டா, மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு ரோஹித் கன்சல் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான கிராம வளர்ச்சித் திட்டங்கள், இடஞ்சார்ந்த தரவுகளின் பயன்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தப் பயிலரங்கு எடுத்துரைத்தது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316563&reg=3&lang=1

----

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317180) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी