பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புக் கணக்குகள் துறையின் 279-வது ஆண்டு தினம் நாளை கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 12:53PM by PIB Chennai

பாதுகாப்பு கணக்குகள் துறை 279-வது ஆண்டு தினத்தை நாளை (1.10.2026) கொண்டாடுகிறது. புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ வளாகத்தில் டாக்டர் டி எஸ் கோத்தாரி அரங்கத்தில் நடைபெறும்.

இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு கணக்குகள் துறையில் பல்வேறு தொழில்நுட்ப முன்முயற்சிகளை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

இதில், இந்திய ராணுவத்தின் நிதிசார் தகவல் அமைப்புடன் இத்துறைக்கான இணையதளத்துடன் ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்படுத்தப்பட்ட தேசிய தொகுப்பு அமைப்பு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கருவூல ஒற்றைக் கணக்கு அமைப்பின் மூலம் பணப்பரிவர்த்தனைக்கான நடைமுறையை அறிமுகப்படுத்தும் பிரிசம் இணையதளம் ஆகியவை அடங்கும்.

மேலும் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளி விவரக் கையேடு, இத்துறையின் இந்தி மொழி இதழான பாரதி, சந்தை முன்னறிவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வெளியீடுகளையும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316873&reg=3&lang=1

***

TV/SV/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317171) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati