சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் கடன் ஆதரவால் தற்சார்பை நோக்கிப் பயணிக்கும் பஞ்சாப் இளைஞர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 4:55PM by PIB Chennai

நலிவடைந்த சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு. சுயதொழிலுக்கான ஆதரவு, அவர்களது வருமான வாய்ப்புகளை அதிகரித்து குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.

பஞ்சாபைச் சேர்ந்த 41 வயதான திரு ஹர்மேஷ் சிங், என்எஸ்எஃப்டிசி கடன் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் ரூ. 3 லட்சம் கடன் பெற்றார். இந்த நிதியுதவி, அவர் தனது சொந்த மின்சாரப் பொருட்கள் வணிகத்தைத் தொடங்கவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் உதவியது.

உதவியைப் பெறுவதற்கு முன்பு, திரு சிங்கின் மாத வருமானம் ரூ. 14,000 ஆக இருந்தது. அவர் தனது தொழிலைத் தொடங்கியதாலும், நிதியுதவியை திறம்படப் பயன்படுத்தியதாலும், அதைத் திருப்பிச் செலுத்திய பிறகு அவரது மாத வருமானம் ரூ. 22,000 ஆக அதிகரித்தது. இந்தக் கடன் உதவியானது திரு சிங்கின் பொருளாதார நிலையை கணிசமாக மேம்படுத்தி, அதிக நிதி நிலைத்தன்மையுடன் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316533&reg=3&lang=1

------

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317070) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी